திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் குடிசையில் இல்லாத தமிழகமாக உருவாக்குவது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, 19 பிப்ரவரி 2024 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் 2030ஆம் ஆண்டுக்குள் ‘குடிசைகள் இல்லாத தமிழகம்’ என்ற திட்டத்தை அறிவித்து, கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறுவார்கள்:
- கலைஞர் கனவு இல்லம் திட்டம் வீடு கட்ட விருப்பம் உடையவர்கள் குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும், அந்த இடத்தில் 300 சதுர அடிக்கு கான்கிரீட் கட்டிடம் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்படும் வீட்டின் சுவர்கள் மன்சுவராகவோ அல்லது மண் சாந்து மூலமாகவோ கட்டப்படக்கூடாது
- மேற்படி இடத்திற்கு சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள்.
- குடிசை வீடுகளில் வாழ்பவர்களே மேற்படி திட்டத்தின் கீழ் பகுதி உடையவர்கள் ஆவார்கள். அவ்வாறு அமைந்துள்ள குடிசை வீடுகளில் ஒரு பகுதி கான்கிரீட் ஆகவோ அல்லது ஆஸ்பெட்டா சீட்டு இருந்தால் தகுதியற்றவர்கள்.
- மேற்படி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு கட்டுமான பொருட்கள் என சிமெண்ட் மற்றும் கம்பிகள் வழங்கப்படும். இதற்கான தொகை அவரவர் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாகும். இந்தத் தொகையில் ரூபாய் மூன்று லட்சத்து 10 ஆயிரம் வீடு கட்டுமான பொருட்களுக்காகவும் நிதியாகவும் வழங்கப்படும் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 90 மனித சக்தி நாட்கள் மூலம் 28000, ஸ்வச் பாரத் இன் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- ஊராட்சி மன்ற தலைவர், உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய மேற்பார்வையாளர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் கொண்ட குழு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களை தேர்வு செய்வார்கள்.