கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன காலையில் உரிய நேரத்தில் பணிக்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் மதிய உணவு இடைவேளை நேரத்தை மிகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனை பயன்படுத்தி மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதில்லை.
ஆகவே இதனை சரி செய்ய மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது, அதில் மத்திய அரசு ஊழியர்கள் காலை 9:15 அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் அதேபோல மாலை 5:30 மணிக்கு அலுவலகத்தை விட்டு செல்ல வேண்டும். மேலும் அலுவலகத்திற்கு 9:15 மணிக்கு பிறகு தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு சாதாரண விடுப்பில் இருந்து அரை நாள் விடுப்பை இழக்க நேரிடும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.