கல்வி மேலாண்மை தகவல் முகமை (Educational Management Information System – https://emis.tnschools.gov.in/) இணையதளத்தில் கடந்த மாதம் மே மாதம் 13ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பொது மாறுதலுக்காக வேண்டி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை 22.06.2024 தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் வருகிற 03.07.2024 தேதி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும் மேலும் அதில் ஏதேனும் திருத்தம் முறையீடுகள் மேற்கொள்ள அவகாசம் வழங்கி 06.07.2024-ம் தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்பு வருகிற 08.06.2024-ம் தேதி முதல் 31.07.2024-ம் தேதி வரை ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு வருவாய் மாவட்டத்துக்குள்ளும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இன்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.